ஆம்பூரில் அதிர்ச்சி! கருணை கிழங்கு சாப்பிட்டவர் பலி

 
அ

ஆம்பூர் அருகே உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து, வீரியம் மிக்க காட்டு கருணை கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள  நிலையில், மணிகண்டன், மாச்சம்பட்டு பகுதியில், உள்ள  தென்னந்தோப்பில், தேங்காய் ஏற்றிக்கொண்டிருந்த போது, அங்கு நிலப்பகுதியில் இருந்த வீரியம் மிக்க காட்டு கருணைகிழங்கு வகையான கிழங்கை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து, அதனை தனது வீட்டிற்கு கொண்டு சென்று கிழங்கை வேகவைக்கமால் சாப்பிட்டுள்ளார். 

பின்னர் மணிகண்டனுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை  அவரது குடும்பத்தினர் சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் வீரியம் மிக்க காட்டு கருணை கிழங்கை சாப்பிட்ட இளைஞர்  உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.