விபத்துக்கு நடுவே செல்பி கேட்ட நபர்! கடுப்பான ஜீவா...
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவர் மனைவி உயிர் தப்பினர்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையின் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீவாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், அதன்மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கார் சாலையின் தடுப்பு மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக விபத்தில் ஜீவா மற்றும் அவர் மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மனைவியுடன் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. சின்னசேலத்தில் நடந்தது என்ன?.. டென்ஷனில் கேள்வி கேட்டவரை திட்டிய காட்சி..!#Kallakurichi | #ActorJiiva | #CarAccident | #Police | #PolimerNews pic.twitter.com/XUZyfhNxgp
— Polimer News (@polimernews) September 11, 2024
இந்நிலையில் விபத்தின் போது அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் நடிகர் ஜீவாவிடம் செல்பி கேட்ட நிலையில், அவரை நடிகர் ஜீவா கண்டித்துள்ளார். 'யோவ் accident ஆயிருக்கு செல்பி கேட்டுட்டு இருக்க’ என கோபமாக பேசினார். உடன் இருந்தவர்கள் செல்பி கேட்டவரிடம் எந்த சூழ்நிலையில் என்ன கேட்கிறீர்கள் எனக் கேட்டனர். தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விபத்தில் சிக்கிய காரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே செல்பி கேட்டவரிடம் ஜீவா கடிந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.