“பல்லி மூஞ்சு..” போலீசாரை அபாசமாக பேசியவர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியீடு
போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது சென்னை காவல்துறை.
சென்னை கடற்கரை பகுதியில் குடிபோதையில் நள்ளிரவில் காரை நிறுத்திய ஜோடியிடம் ரோந்து போலீசார் விசாரித்தபோது, உதயநிதியை கூப்பிடவா என கேட்டு அவர்கள் காவலர்களை இழிவாக பேசிய வீடியோ வைரலானது. இதனையடுத்து மயிலாப்பூரில் விடுதி எடுத்து தங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.
On 20.10.2024, Chandramohan who entered into an altercation using abusive language with the duty police personnel at Marina Loop Road, Chennai was arrested along with his girlfriend. He realized his mistake and apologized.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 21, 2024
20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில்… pic.twitter.com/5W5NljWSxR
இந்நிலையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது சென்னை காவல்துறை. அந்த வீடியோவில் அவர், அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததால் நிதானம் இல்லாமல் காவல்துறையினரை தகாத வார்த்தையால் பேசிவிட்டேன். இனி இதுபோல் பேசமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.