நடைபயிற்சி சென்றவர் வெட்டிக் கொலை! செங்கல்பட்டில் பரபரப்பு

 
murder

செங்கல்பட்டு அருகே நடை பயிற்சி சென்றவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

murder

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் காந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). இவருக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காலை வழக்கம் போல் தனது வீட்டு அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் சரவணனின் தலை மற்றும் முதுகு பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த சரவணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸ்க்கும் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரியபடுத்தினர்

சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் சரவணனை செவிலியர் பரிசோதித்த போது ஏற்கனவே சரவணன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்து இரத்த வெள்ளத்தில் இருந்த சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்துள்ளனர், முன் விரோத காரணமாக என பல கோணங்களில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்