கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

 
சுட்டு

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

நீடாமங்கலம் அருகே வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைதான நிலையில், தப்பியோடிய ரவுடி மனோ நிர்மல்ராஜை ஆதனூரில் போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது காவலர் விக்னேஷை வலது கையில் அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி மனோ நிர்மல்ராஜ் தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. 

தப்பியோட முயன்ற ரவுடி நிர்மல்ராஜை நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த காவலர் விக்னேஷ், ரவுடி நிர்மல் ராஜ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.