நாம் தமிழர் கட்சியின் பேனரை அகற்றிய காவல்துறையினர்- எதிர்ப்பு தெரிவித்தோர் குண்டுகட்டாக கைது

 
sdsfee sdsfee

கோபி அருகே உள்ள  நம்பியூரில் நாம் தமிழர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை குண்டுகட்டாக வேனில் ஏற்றி காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோபி அருகே உள்ள நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு, நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்க இருக்கும் மே 18 இன எழுச்சி பொதுக் கூட்ட பதாகை வைக்கப்பட்டது.இந்த பதாகை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாகவும், அதனால் பதாகையை அகற்றுமாறு நம்பியூர் காவல் துறையினர் அதனை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள தாண்டவ மூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பதாகையை அகற்ற முடியாது என எதிர்ப்பு தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளல் தாண்டவமூர்த்தி, மற்ற கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு  மட்டும் பதாகை வைக்க அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, காவல் துறையினரும் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அந்த பதாகைகளை அகற்ற முற்பட்டபோது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் காரின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பதாகையை அகற்ற மறுப்பு தெரிவித்து துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் தாண்டவ மூர்த்தியை குண்டுகட்டாக காவல் நிலைய வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.