‘முக்தி’ அடைய வேண்டுமென கூறிய பெண்- கழுத்தறுத்து கொலை செய்த சாமியார்
மூச்சி இறுதியில் முக்தி பெற்று திருவண்ணாமலையில் எனது உயிர் போக வேண்டும் என பெண் கூறியதால் கழுத்துறுத்து கொலை செய்தேன் என சாமியார் ஒருவர் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கொளத்தூர்கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அடையாளம் தெரியாத பெண் கழுத்துறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாடு மேய்ப்பவர்கள் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் சம்பவடத்திற்கு திருவண்ணாமலை எஸ்.பி பிரபாகர் தலைமையில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வீரா வரவழைக்கபட்டு தடயங்களை சேகரித்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து பெண்ணின் கைப்பையில் இருந்த தடயங்களை வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புத்தூர் தாலுக்கா மலைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி அலுமேலு(50)என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அலுமேலுவை யார் கொலை செய்தார்கள் என ஆரணி டி.எஸ்.பி.ரவிசந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கண்ணமங்கலம் பகுதியில் பொருத்தபட்ட சிசிடிவி காட்சியை கொண்டு சென்னை குன்றத்தூரில் பதுங்கி இருந்த சாமியார் தஞ்சன்(50) என்பவரை போலீசார் கைது
செய்தனர்.
பின்னர் கைது செய்யபட்ட சாமியார் தஞ்சன்(60) என்பவரிடம் கண்ணமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போடு அலுமேலு சிவன் மீது கொண்ட பக்தியால் திருவண்ணாமலையில் முக்தியடைய வேண்டும் என்று கூறியதால் கொளத்தூர் ஏரிக்கு அழைத்து சென்று கழுத்தறுத்து கொலை செய்து முக்தியடைய வைத்தேன் எனக் கூறி போலீசாரை அதிர வைத்து குழப்பியுள்ளார். மேலும் போலீசாரின் கிடுக்குபிடி விசாணையில் அலுமேலு என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளதாகவும் அதனை திருப்பி தர முடியவில்லை என்று இருதரப்பினருக்கும் சண்டை ஏற்பட்டன. பின்பு 1 மாதம் கழித்து மீண்டும் அலுமேலுவிடம் பணத்தை திருப்பி தருவதாக கூறி கண்ணமங்கலம் அருகே உள்ள எனது சொந்த கிராமமான ரெட்டிபாளையம் கிராமத்திற்கு அழைத்து வந்து கழுத்தறுத்து கொலை செய்ததை சாமியார் தஞ்சன் ஓப்பு கொண்டான்.
பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பெண் கொலை சம்பவம் நடந்தேறி 24மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்ததை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.