அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் நடப்பட்டது!!

 
tn

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் நடப்பட்டது.

jalli

தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான்.  தை மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு,  அவினியாபுரம் ஆகிய இடங்களில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  2024 ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் கடந்த 6ஆம் தேதி அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தனர். 

jalli

இந்நிலையில்  பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜன.17ல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது.  அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது. அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.