தொடர்ந்து எகிறும் தங்கம் விலை..! 4 நாட்களில் ரூ.1,680 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் ரூ.73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக என்பதைவிட, கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி ஏற்றங்களை கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.50,000 என்கிற அளவில் இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் ரூ.70,000ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. அதன்பிறகும் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் 72,720 ரூபாயாகவும், ஒரு கிராம் 9,090 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனையாகிறது. மேலும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130க்கு விற்பனை ஆகிறது.
அதேநேரம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்காளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


