தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை!
Mar 7, 2024, 10:21 IST4:51:15 AM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இந்த சூழலில் இன்றும் தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையால் சாமானியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.