ரூ. 55 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை - அதிர்ச்சியில் சாமானியர்கள்!!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ. 55ஆயிரத்தை கடந்தது.

gold

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  நேற்று முன்தினம்  தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது.  நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கு விற்பனையானது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக் ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,890-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90க்கும்  , ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.