சரிந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!!

 
gold gold

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. 

gold

  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம்  கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை  ரூ.6,690-க்கு விற்பனையானது. அத்துடன் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று  ஆபரணத் தங்கம்  கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து,  ஒரு கிராம் ரூ.6,695 க்கும் , சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.95.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனையாகிறது.