சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா??

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து,  ₹43,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹5475க்கு விற்பனையாகிறது!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து சவரன் 44 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது. மேல கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.  இதன் மூலம்  நேற்று ஒரு சவரன் ரூ. 43,760 ஆகவும் , ஒரு கிராம் ரூ.5470க்கும்  விற்கப்பட்டது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

என்று மீண்டும் தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டிருக்கிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,475 ரூபாய்க்கு விற்பனையாகிறது.