"பிரதமர் அவையை மதித்து வருவதேயில்லை" - எம்.பி.சு.வெங்கடேசன் ட்வீட்

 
mp

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 11வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் தொடங்கிய நிலையில்  மக்களவையில் கடும் அமளியால் பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் அளிக்கப்பட்டது குறித்து விவாதம்; “மணிப்பூர் விவகாரத்தில் நாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது?” என திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

parliament

இதனிடையே  ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி தெரிவித்த நிலையில் அவையில் இருந்து வெளியேறினார்.  பிரதமரை அவைக்கு வருமாறு தம்மால் அறிவுறுத்த முடியாது என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கர் தெரிவித்து இருந்தார். அத்துடன் அவையின் கண்ணியத்திற்கு ஏற்றவாறு உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் வரை மக்களவைக்கு வரப்போவதில்லை என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா  தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களவையின் மாண்பு குலைக்கப்படுவதால் சபாநாயகர் அவைக்கு வரப்போவதில்லை - நாளிதழ்கள்.பிரதமர் அவையை மதித்து வருவதேயில்லை.நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபின்  மரபுக்குஎதிராக பல மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆளுங்கட்சி அனைத்தையும் மீறுகிறது. அவர் என்ன செய்வார்? என்று குறிப்பிட்டுள்ளார்.