மாணவிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்! அடியாட்கள் 2 பேர் சிறையிலடைப்பு

 
b

அரசு கல்லூரி பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவிக்கு தவறாக நோக்கத்தில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.   இதை தட்டிக் கேட்ட மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   அந்த மாணவரை கத்தியால் குத்தி விட்டு ஓடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே புத்தூர் பகுதியில் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது.   இந்த கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் சத்தியமூர்த்தி .  இவர் தன்னிடம் படிக்கும் மாணவி ஒருவருக்கு தவறான எண்ணத்தில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.   இது குறித்து அந்த மாணவி பி பி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் தனது மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் குமாரிடம் சொல்லி இருக்கிறார்.

f

அவர் இதை கேட்டு ஆத்திரமடைந்து பேராசிரியரை தட்டி கேட்டு இருக்கிறார். இதனால் அந்த மாணவர் மீது ஆவேசம் அடைந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி, அடியாட்களை ஏவி மாணவரை தாக்க சொல்லி இருக்கிறார். 

 இதை அடுத்து இரண்டு பேர் மாணவர் திலீப் குமாரை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.   இதை அடுத்து அந்த மாணவர் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அங்கு அந்த மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.   சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவனை கத்தியால் குத்தியவர்கள் அருள் செல்வம் , அருள் அரசன் என்பது தெரிய வந்திருக்கிறது.  இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.   இதன் பின்னர் தலைமறைவாக இருக்கும் பேராசிரியர் சத்தியமூர்த்தியை கைது செய்ய தேடி வருகின்றனர்.