திமுக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள் குறித்த உத்தேசப் பட்டியல் இதோ!!

 
arivalayam

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.

dmk

பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள்  குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு: 

  • வடசென்னை
  •  தென் சென்னை
  •  மத்திய சென்னை
  •  ஸ்ரீபெரும்புதூர்
  •  காஞ்சிபுரம்

dmk

  • அரக்கோணம்
  • திருவண்ணாமலை
  • வேலூர்
  • கடலூர்
  • தருமபுரி
  • பெரம்பலூர்

stalin

  • கள்ளக்குறிச்சி
  • ஈரோடு
  • சேலம்
  • கரூர்
  • நீலகிரி
  • பொள்ளாச்சி
  • தஞ்சாவூர்
  • தென்காசி
  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி