ரிவேர்ஸ் கியர் வேலை செய்யாததால் நடுரோட்டில் நின்ற பேருந்தை தள்ளிய பொதுமக்கள்

 
பேருந்து

ஆண்டிபட்டி அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பின்பக்கமாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தள்ளிவிட்ட  நடத்துநர் மற்றும் பொதுமக்களின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையிலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள  தேனி வருசநாடு பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்து வருசநாடு செல்லும் வழியில் அண்ணாநகர் பகுதியில் பழுதாகி நின்றது. அரசுப் பேருந்தின் முன்பக்க கியர்கள் வேலை செய்த நிலையில் பின்பக்க கியர்கள் வேலை செய்யவில்லை. இதனால் மலைக்கிராமங்களுக்கு செல்லும் இப்பேருந்தை பின்பக்கமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பேருந்தை பின்பக்கமாக  பலமுறை  ஓட்டுநர் இயக்கி பார்த்தும்  இயக்க முடியாததால் வேறு வழியின்றி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துநர், பயணிகள், பொதுமக்கள் பின்பக்கமாக பேருந்தை தள்ளிவிட்டனர். 

இதையடுத்து ஒருவழியாக பேருந்தை இயக்கி  பயணிகள் யாரையும் பேருந்தில் ஏற்றாத பேருந்து ஓட்டுநர் நடத்துனரை மட்டும் ஏற்றிக்கொண்டு பேருந்தை பழுதுபார்க்க தேனிக்கு முன்பக்கமாகவே  இயக்கி சென்றார்