“கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 
mk stalin

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது;9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்;தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு. கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம்.

MK Stalin

மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது இலங்கையின் வாடிக்கையாக உள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக வாழ, இந்தியாவில் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என பேசிய மோடி என்ன செய்தார்?பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் எனக்கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?என்றார்.தொடர்ந்து பேசிய அவர்,மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு, அதனால் உடனடியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.