ரூ.611 கோடியில் திறக்கப்பட்ட வொண்டர்லா... திறக்கப்பட்ட நாளிலே பாதியில் நின்ற ரைடு!

 
ரூ.611 கோடியில் திறக்கப்பட்ட வொண்டர்லா... திறக்கப்பட்ட நாளிலே பாதியில் நின்ற ரைடு! ரூ.611 கோடியில் திறக்கப்பட்ட வொண்டர்லா... திறக்கப்பட்ட நாளிலே பாதியில் நின்ற ரைடு!

ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட சென்னை வொண்டர்லா கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப்பூங்கா திறக்கப்பட்ட 2 நாட்களிலேயே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மக்கள் பூங்காவிற்குள் சென்ற சில மணிநேரங்களிலேயே ரைடுகள் பாதியில் நின்றதால் சலசலப்பு ஏற்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட வொண்டர்லா தீம் பார்கில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதன் நிறுவனத் தலைவர் வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கூறினார்.

India's Biggest Roller coaster

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே இல்லலூர் பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கடந்த ஒன்றாம் தேதி திறக்கப்பட்ட வொண்டர்லா தீம் பார்க்கில் நேற்று  பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட சென்றிருந்த நிலையில் அங்கு  மழை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து நிறுவன தலைவர் அருண் இன்று வீடியோ மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபோன்று தொழில்நுட்பக் கோளாறு இனிவரும் காலங்களில் நடைபெறாது எனவும் விடுமுறையை கொண்டாட ஏற்ற முறையில் இனி தீம் பார்க் செயல்படும் எனவி, அவர் வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..