வரும் 21ம் தேதி நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு!!

 
tn

நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 21ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

cm stalin

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரக் கருவிகள் நிறுவும் பணிகள்  நடைபெற்றன.

stalin

அத்துடன் நுண் வடிகட்டிமற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம், சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 21ம் தேதி திறந்து வைக்கிறார்.