திடீரென சரிந்த மேஜை சீமான் கால் சிக்கியதால் பரபரப்பு... இடது காலில் பயங்கர அடி
திருவேற்காட்டில் செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் காலில் டேபிள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோலடி ஏரியில் ஆக்கமிப்புகள் அகற்றுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட நிலையில் வருவாய் துறையின் நோட்டீசால் மன உளைச்சல் ஏற்பட்டு உயிர் இழந்த சங்கரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார் பின்னர் அவரது உறவினருக்கு ஆறுதல் தெரிவித்த சீமான் அங்கிருந்த பொது மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த சீமான், “நான் இருக்கின்றேன், பயப்பட வேண்டாம். இடிக்க முடியாது, இடிக்க நினைத்தால் அடுத்த நொடி நான் இங்கு இருப்பேன்.. இந்த ஏரி ஆக்கிரமிப்பு என கூரும் இவர்கள் தான் பரந்தூரில் 3 ஏரியை அடைத்து விமான நிலையம் கொண்டு வர நினைக்கின்றனர்” என்றார். செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் மைக் வைத்திருந்த டேபில் திடீரென சிமானின் காலில் விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் முகத்தை சுளித்தார். பின்னர் அருகில் இருந்த பெண் நிர்வாகியின் விசாரித்தார். சிமானின் காலில் ஷு அணிந்து இருந்தும் டேபில் விழுந்தது காலில் அடையாளமாக இருந்தது. டேபில் இடது காலில் விழுந்ததில் அங்கிருந்து தாங்கி தாங்கி நடந்து சென்றார்.