முதலமைச்சரின் பாதுகாப்புக்காக 6 கார்களை வாங்கியது தமிழக அரசு

 
பைலட்

முதலமைச்சரின் பாதுகாப்பாக 6 புதிய கருப்பு நிற இன்னோவா கார்களை தமிழக அரசு வாங்கியது.

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். ஸ்டாலின் எங்கு சென்றாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் வழங்கப்படும். இதற்காக குண்டு துளைக்காத ஜாமர் கார் வசதி கொண்ட கார்கள் பயன்படுத்தப்படும்.

Image

இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்கள், நவீன ஜாமர்கள் உள்ளிட்டவற்றுடன் முதலமைச்சரின் பாதுகாப்புக்காக 6 புதிய கருப்பு நிற இன்னோவா கார்களை வாங்கியது தமிழக அரசு. முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த முதலமைச்சரின்  கார்கள் தற்போது கறுப்பு நிறத்தில் Pilot என்று பொறிக்கப்பட்டு மின்விளக்குகளோடு கூடிய கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வாங்கப்பட்டுள்ளது. மேலும் காரின் மேல் பகுதியில் இருந்து அனைடதது நகர்வுகளையும் பதிவு செய்யும் வகையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வீரர்கள் 10 பேர் வீதம் காரின் வெளிப்புறத்தில் பாதுகாப்பு பணிக்கு நிற்கும் வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.