மாணவனுடன் புதுச்சேரிக்கு அவுட்டிங் சென்ற ஆசிரியை!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பெற்றோருக்கு தெரியாமல் மாணவரை அழைத்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியை பாத்திமா கனி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
)
காரியாபட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக மதுரை வில்லாபுரத்தை சேர்த்த பாத்திமா கனி(40) பணிபுரிந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அப்பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவர் ஒருவரிடம் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் அவரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தது. அதற்கு பிறகும் மாணவருடன் ஆசிரியை தொடர்பில் இருந்ததால் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில் மாணவரை காணவில்லை என அவரின் தந்தை ஆவியூர் போலீசாரில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து,புதுச்சேரியில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த மாணவரையும், முன்னாள் ஆசிரியையையும் பிடித்தனர். மாணவரை கல்லூரியில் சேர்க்கவே அழைத்து வந்ததாக ஆசிரியை தெரிவித்தார். இருப்பினும் பெற்றோருக்கு தெரியாமல் மாணவரை அழைத்து சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது செய்யப்பட்டார். மாணவரை பெற்றோருடன் போலீசார் அனுப்பினர்.


