"விபத்துகளை குறைக்க பூசணிக்காயை உடைத்த காவலர்" - போக்குவரத்து காவல்துறை விளக்கம்!!

 
tn

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவியலை மட்டுமே நம்புவதாக தெரிவித்துள்ளது.

tn

சென்னை மதுரவாயல்,  வானகரம்,  பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.  இந்த சூழலில் சாலை விபத்துக்களை தடுக்க மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சிலர் திருநங்கை ஒருவரை அழைத்து காவல் வாகனத்தில் ஏற்றுக்கொண்டு அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தை திருஷ்டி சுற்றி போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது..  இதனால் சென்னை காவல்துறை மூடநம்பிக்கைகளை நம்புகிறதா என்று பலரும் தங்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் , இது குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது .

அதில், இது ஒரு தனிப்பட்ட அதிகாரி தனது தனிப்பட்ட நம்பிக்கையின் நீட்சியால் செய்த நல்ல நோக்கம் கொண்ட ஆனால் முற்றிலும் தவிர்க்க கூடிய செயலாகும் . அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையை வேறுபடுத்தி பார்க்க ஒரு கணம் தவறிவிட்டார்.  சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையானது பகுத்தறிவு , அறிவியல் பகுப்பாய்வு , விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு மட்டுமே நம்புகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இருந்து விலக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.