NEET Exam பரிதாபங்கள்- தேர்வெழுத வந்த மாணவன் கண்ணீருடன் வீடு திரும்பிய சோகம்

 
s

திருச்சியில் நீட் தேர்வு மையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கண்ணீருடன் வீடு திரும்பினார்.

இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மதியம் இரண்டு மணிக்கு தொடங்கப்பட்டது. நீட் தேர்விற்காக காலை 11 மணி முதல் 1.30 வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெரம்பலூரை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது தந்தையுடன் ஐந்து நிமிடங்கள் தாமதமாக 1.35 மணிக்கு தேர்வு நடைபெறும் தந்தை பெரியார் கல்லூரிக்கு வருகை தந்தார். ஆனால் கதவு மூடப்பட்டு அதிகாரிகள் அனைவரும் தேர்வு மையத்திற்கு சென்றனர். தேர்வு மையத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக போலீசார் நின்று கொண்டிருந்தனர். தாமதமாக வந்த அந்த மாணவர் யாரிடம் கதவை திறக்க சொல்வது என தெரியாமல் தன் தந்தையுடன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார். ஆனால் கடைசி வரை யாரும் வராததால் அந்த மாணவனும் அவருடைய தந்தையும் வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.