Jananayagan டிரெய்லர் வெளியானது..!!
Jan 3, 2026, 19:35 IST1767449149887
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் “ அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.


