#BREAKING | நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை - மத்திய ஆய்வு குழு அறிக்கை!!

 
ttn ttn

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய ஆய்வு குழு தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளது 

ttn

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக் இறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்தி கொண்டதாலேயே விவேக் உயிரிழந்ததாக செய்திகள் பரவின.  இதனால் தடுப்பூசி பாதுகாப்பற்றது என்று அச்சம் பொதுமக்களிடம் நிலவத் தொடங்கியது. இதனால் இது குறித்த உண்மை நிலையை அறியும் பொருட்டு தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணம் மற்றும் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு,  நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்ட காரணத்தினால் மரணம் அடையவில்லை என தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டே இரண்டு நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார்.  இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணம் இல்லை என்றும் ஏப்ரல் 15ல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மரணத்திற்கு  உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு  காரணமே தவிர தடுப்பூசி காரணமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது.