தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

 
தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

தாம்பரம் அருகே த.வெ.க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் மயக்கமடைந்தார். 11 பேருக்கு லேசான சிராப்பு காயம் ஏற்பட்டுள்ளது.

Image

சென்னையை அடுத்த மேடவாக்கம அருகே நன்மங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விழுப்புரம் அருகே நடைபெரும் த.வெ.க கட்சி முதல் மாநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு நள்ளிரவு மகேந்திரா டெம்போ டிரவல்லர் வேனில் வேளச்சேரி பிரதன சாலை வழியாக சந்தோஷபுரம் என்கிறபகுதியை கடந்தபோது அதே மார்கத்தில் சென்ற  லாரியை முந்த முயன்றுள்ளனர். அப்போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் வேனை ஓட்டிய கார்த்திக் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். மேலும் வேனில் சென்ற 11 பேர் லேசான காயம் அடைந்தனர்.


தகவல் அறிந்த சேலையூர் போலீசார் ஓட்டுனர் கார்த்திக்கை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து ஏற்பட சந்தோஷ்புரம் சாலையில்  ஆக்கிரமித்து பட்டாசுகடைகள் அமைக்கப்பட்டு இருந்தது காரணமா என பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.