சாலையில் கழன்று ஓடிய ரோடு ரோலரின் சக்கரம்! திருவாரூரில் பரபரப்பு
Nov 12, 2024, 20:25 IST1731423311968
திருவாரூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலரின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் உன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர். திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய தஞ்சாவூர் சாலையிலிருந்து வந்த ரோடு ரோலர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் சக்கரம் உடைந்தது. அப்போது நாகலூர் கிராமத்திற்கு சென்ற நகரப் பேருந்து மெதுவாக புறப்பட்டு வந்து கொண்டு இருந்த பேருந்து மீது ரோடு ரோலர் மோதி இடித்தது.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.