ராமதாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

 
ராமதாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி காவல்நிலையத்தில் ஒப்படைப்பு ராமதாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ச்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு எதிரொலியால் சோபாவை மாற்றினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த கருவி லண்டனிலிருந்து வாங்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். இதுதொடர்பாக புதுச்சேரி கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் பாமகவினர் புகார் அளித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோட்டகுப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ஒட்டுக்கேட்பு கருவியை ஒப்படைத்தார். ஒட்டுக்கேட்பு கருவியின் உள்ளே இருந்த லைகா சிம், பேசும் போது மட்டும் ஆன் ஆகும் வசதி கொண்டது.