அமைச்சரிடம் சாமியாடி சாலை வசதி கேட்ட பெண்

 
லட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்குட்பட்ட ரெட்டிபாளையும் முதல் பெலாகுப்பம் வரை 93.33 லட்சம் மதிப்பிட்டில் சாலை அமைப்பதற்க்கான பணி துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

செஞ்சி அருகே சாமி ஆடி அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்
இந்நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டார் ரெட்டிபாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதிபழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டபோது அண்ணாநகர் பழங்குடியின பகுதியை சேர்ந்த சந்திரா மீது திடீரென சாமி வந்து ஆடினார். 
 
சிறுது நேரம் சாமி ஆடிய சந்திராவிடம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நீங்கள் யார்? என கேக்க நான் கன்னிமார்னு சந்திரா பதில் கூற, என்ன வேணும்? சாமி ஆடிய பெண்ணிடம் அமைச்சர் கேட்க நான் இருக்கிற ஊருக்கு ரோடு போட்டு தானு சந்திர பதில் கூறவே அமைச்சர் ஒரு சிலர் ஆக்கிரமிரமித்துள்ள வழியை தந்தா சாலை போட்டு தர்ரேனு சொல்ல சந்திரா அதெல்லாம் நீ பாத்துகோ ரோடு போட்டு தானு உரக்க குரலில் கூறிய பிறகு அமைச்சர் லட்டு கொடுத்து சாமியாடிய பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பழங்குடியின பெண் நூதன முறையில் அமைச்சரிடம் சாலை வசதி கேட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.