காதலியை அடித்து கொன்ற இளைஞர்! கோவையில் பரபரப்பு

 
murder

கோவையில்  காதலியை அடித்து கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஜிம் பயிற்சியாளர் கொடூர கொலை... கைதான காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்!


கோவை ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர்  சரவணன் (29).  சிறு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, கோவில்பாளையம் அருகே உள்ள  கள்ளப்பாளையம், பகுதியை சேர்ந்த கீதா (26) என்ற உறவினர் பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம்  செய்துள்ளார். இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததையடுத்து கீதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் சரவணனை எச்சரித்து அனுப்பிய போலிசார் கீதாவை அவரது பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். காவல் நிலையத்தில் பிரித்து வைத்தாலும் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கிய சரவணன், கீதா ஜோடிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சரவணன் அடித்ததில் மயங்கி விழுந்த கீதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து விடுதியில் இருந்த சரவணன்  தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் சனிகிழமை காலையில் நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்பாடல் இருந்ததால் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கீதாவை அடித்துக் கொன்ற  சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.