நட்சத்திர ஓட்டலில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளைஞர் - மற்றொரு அறைக்குள் நுழைந்ததால் பரபரப்பு

 
arrest arrest

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் ஐடி ஊழியர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்ததோடு, மற்றொரு அறைக்குள் நுழைய முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதே ஓட்டலில் பெண் தோழியுடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்த ஐடி ஊழியர் ஒருவர் மது போதையில் நிர்வாணமாக அங்கும், இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், அந்த நபர் திடீரென வடமாநிலத்தவர் ஒருவர் தங்கிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டதோடு, அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்றை அறையில் தங்கியிருந்தவர்கள், இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 

இதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை உடை அணிய வைத்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர்  ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் என்பதும், பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்த‌தும் தெரிய வந்த‌து.  போதையில் இருந்த‌தால் நிதானமின்றி இவ்வாறு செய்துவிட்டதாக அந்த நபர் கூறிய நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.