"தெகிடி" நடிகர் பிரதீப் சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் கோலிவுட்!!

 
rr rr

’தெகிடி’ படப்புகழ் பிரதீப் கே. விஜயன் உயிரிழந்துள்ளார். 

தெகிடி மீசையை  முறுக்கு இரும்பு திரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர்  நடிகர் பிரதீப்.   சென்னையில் உள்ள அவரது வீடு இரண்டு நாட்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில்  நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவரது நண்பர்கள் சந்தேகத்தின் பேரில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரதீப் கே விஜயன்

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் பிரதீப் வீட்டு பூட்டை உடைத்துள்ளனர்.  அப்போது அவர் சடலமாக வீட்டிற்குள் கிடந்துள்ளார்.  இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பிரதீப் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.