தேர்தலில் தக்க பதிலடி இருக்கு.. விஜய் தராதரம் அவ்வளவுதான் - கே.என்.நேரு ஆவேசம்..!!

 
தேர்தலில் தக்க பதிலடி இருக்கு.. விஜய் தராதரம் அவ்வளவுதான் - கே.என்.நேரு ஆவேசம்..!! தேர்தலில் தக்க பதிலடி இருக்கு.. விஜய் தராதரம் அவ்வளவுதான் - கே.என்.நேரு ஆவேசம்..!!


தவெக தலைவர் விஜய்க்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

தவெக 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது தவெகவின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறியிருந்தார். அத்துடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று அவர் கூறியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.  

விஜய்யின் பேச்சிற்கு திமுக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  அந்தவகையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச்அர் கே.என்.நேரு, “பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால்காந்தி மார்க்கெட்  மாற்றப்படாது.  காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது.  காந்தி மார்க்கெட் அங்கேயே தான் இருக்கும்.  

விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்துள்ளாரே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், அவருடைய தராதரம்  அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை , 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்.  

நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வ்ஓம். அதில் ஓன்றும் மாற்றமில்லை. 10 பேர் 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசுவது சரியாக இருக்குமா?? அது சரியாக இருக்காது” என்று காட்டமாக பதிலளித்தார்.