தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை - அமைச்சர் ரகுபதி..!

 
1 1

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார். மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை. விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரி இல்லை.  

தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை. விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை. எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை. பா.ஜ.க.வின் 'சி' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறியச் செய்யும் திருவிழா. இவ்வாறு அவர் கூறினார்.