ஒரு சமாதானமும் எடுபடல.. மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்..!
தைலாபுரம் புறப்பட்டுச் சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் மாவட்ட செயலாளர்களை மீண்டும் மாற்றி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரையும் சமாதானப்படுத்த பலரும் முயற்சித்து வரும் நிலையில், கடந்த வாரம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி தந்தையுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த 4நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார்.
மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் கவிதாவின் இல்லத்திலும், குடும்பத்தினர் இணைந்து ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளித்ததாக இதுவரை தெரியவில்லை. நிறுவனர் ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை மொத்தமாக மாற்றியமைத்து வருகிறார். அன்புமணிக்கு ஆதரவாக இருப்பவர்களை தூக்கிவிட்டு அந்த இடத்தில் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அரசியலுக்கு வயது இல்லை, நிறுவனறும் நானே, தலைவரும் நானே என கூறிவரும் நிலையில் இந்நிலையில் இன்று மீண்டும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற ராமதாஸ், கட்சியின் கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்களை மாற்றியுள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்கு மாநகர தலைவராக முருகானந்தம் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்ட பேரூர் தலைவராக அருண் ராஜ் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்ட மேற்கு மாநகர செயலாளராக சிலம்பரசன் நியமனம்
கடலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜய் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்ட வடக்கு மாநகர செயலாளராக ஆனந்து நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளராக அருள் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய தலைவராக லோகநாதன் நியமனம்
கடலூர் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய துணை தலைவராக சிவா நியமனம்
திருவண்ணாமலை மேற்கு செயலாளராக பவுன்குமார் நியமனம்
திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராக சுமன் நியமனம்
பாமக சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


