செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் அரசியல் காழ்புணர்ச்சி இல்லை!!

 
tn

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவாதாக் கூறி கையூட்டு பெற்றதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tn

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி தொடர்பாகவே விசாரணை நடக்கிறது. பணத்தை திருப்பி அளித்து விட்டோம் என்று கூறினால் தவறு சரியாகிவிடாது.

Annamalai

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சட்டவிதியாக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. செந்தில் பாலாஜி மொரிசியஸ் உட்பட அயல் நாடுகளுக்கு பணப்பரிவுரதனை செய்ததற்கான ஆதாரம் ஹார்ட் டிஸ்க் மூலமாக தெரிய வந்தது . இதன் காரணமாக அமலாக்கத்துறை தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வந்தது?

annamalai mkstalin

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் எந்தவிதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று முதலமைச்சர் விளக்குவாரா ? நீதிமன்றம் வழிகாட்டுதலின்படியே வருமான வரி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை தேவையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு க ஸ்டாலின் கூறினார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நீட் வருவதற்கு முன் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள் என்று வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். 7.5% இட ஒதுக்கீட்டு இதில் கொண்டு வர வேண்டாம் என்று விளக்கமளித்தார்.