மக்களவை தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை!

 
PMK

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று பாமக  திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

pmk

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்த சூழலில் பாமக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது.

pmk

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில நலன் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக பாமக அறிவித்துள்ளது.  .கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது. அப்போது பேசிய ராமதாஸ், பாரத ரத்னா விருது கொடுத்தாலும், வேறு எந்த விருது கொடுத்தாலும், நான் அதை வாங்க மறுப்பேன். அதை விட சிறந்த விருது, பாமக சொந்தங்களின் மனதில் நான் வாழ்வது தான். கூட்டணி குறித்து சரியான முடிவெடுப்போம், பாமகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன். நான் ஊதியத்திற்காக வேலை செய்பவன் அல்ல;  ஊமை ஜனங்களுக்காக வேலை செய்கிறேன் என்றார்.