தவெக மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை
மதுராந்தகம்அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்க்கு அதிகப்படியான வாகனங்கள் படையெடுத்து செல்வதால் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் வாகனங்களை அனுப்ப போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடி ஊழியர்கள் இலவசமாக அனுப்பி வைக்கின்றனர்.
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு இந்த சுங்கச்சாவடியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வாகனங்களில் செல்கின்றனர். இந்த சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஆயிரம் வாகனங்கள் மாநாட்டிற்கு செல்கின்றன. பேருந்து, வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களிலும் மாநாட்டிற்கு தொண்டர்கள் அணிவகுத்து செல்கின்றனர்


