“கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம்”- நயினார் நாகேந்திரன்
Dec 15, 2025, 19:22 IST1765806727550
அமித்ஷாவிடம் உத்தேச பட்டியலை வழங்கியதாக வெளியான தகவல் தவறானது, மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டேல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம். சில கட்சிகள் வந்து சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அமித்ஷாவிடம் உத்தேச பட்டியலை வழங்கியதாக வெளியான தகவல் தவறானது, மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.


