தேவர் குருபூஜை - பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு
முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை மரியாதை செலுத்த உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவர் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதியில் விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் செல்லக்கூடிய பிற மாவட்ட வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும் என மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் ட்ரோன் கேமரா இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.