"சகித்துக்கொண்டு தான் கூட்டணியில் இயங்குகிறோம்" - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “100% கூட்டணியுடன் உடன்பாடு இயங்க முடியாது. அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள் எங்களுக்கு எப்போதும் பல தொல்லை தருகிறார்கள். நாங்கள் ஒத்துழைப்பது என்பது கூட்டணியின் நலனுக்காக அல்ல, தேசம் மற்றும் மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுகிறோம். சகித்துக்கொண்டு தான் கூட்டணியில் இயங்குகிறோம். பாஜக கூட்டணியில் இருந்தபோது அந்தக் கட்சியை சந்தோஷப்படுத்த, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி வேட்டையாடியவர் திமுக தலைவர் கருணாநிதி.
புகழின் உச்சத்தில் இருக்கிறபோது மக்கள் தொண்டு செய்ய தன் கலைத்துறை பணிகளை ஒதுக்கி வைத்துள்ளார் விஜய். அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரை வாழ்த்துகிறேன். மக்கள் தொண்டு செய்வதற்காக தனது கலைத்துறை பணிகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வருகிறார். திரைத்துறையில் அவரது செல்வாக்கு இன்னும் நீள்கிறது. இன்னும் பல ஆண்டுகள் அவரால் சினிமாவில் மிளிர முடியும்” என்றார்.