ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கும் திருமாவளவன் மற்றும் விஜய்...பரபரப்பாகும் அரசியல் களம்!

 
vijay vijay

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். அவரது கொள்கை, கோட்பாட்டிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். அந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு சிறிய கட்சிகள் பலவற்றையும் பெரிதும் ஈர்த்தது. 

vijay

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் குறித்து தனியார் வார இதழ் நடத்தவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் பங்கேற்கின்றனர்.
விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, விஜய் அதனை பெற்றுக்கொள்கிறார். ஒரே நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் பங்கேற்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.