முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் வழங்கினார் திருமாவளவன்

 
tn

புயல் நிவாரண பணிகளுக்காக விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹10 லட்சம் வழங்கினார்.

rain

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் தாராளமாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 


இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சிக்கிறது; புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 75,000 கோடி கேட்டால் மத்திய அரசு 51,000 கோடி கொடுக்கிறது; கடந்த காலங்களை விட இந்தமுறை அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு; மீட்பு பணிகள் சிறப்பாக இருந்தாலும் 47 ஆண்டுகள் இல்லாத தொடர் கனமழையால் வெகுவாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.