அரசியல் எவ்வளவு கடினமான, போராட்டம் நிறைந்த ஒரு களம் என்பதை விஜய் உணருவார்- திருமாவளவன்

 
திருமாவளவன் விஜய்

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் வெற்றிகரமாக அமையட்டும் என விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல- திருமாவளவன் | Tamil cinema  thirumavalavan speech goes viral

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்பி திருமாவளவன், “தவெக தலைவர் விஜய் கட்சி ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் என ஆர்.எஸ் பாரதி கூறுகிறார். எல்லோரும் வைக்கக்கூடிய விமர்சனம் தான் இது. சினிமாவிலிருந்த காலத்திலேயே எம்ஜிஆர் அரசியல் பணிகளை மேற்கொண்டார், அதனால் அவர் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவருடன் அனுபவமிக்க நபர்கள் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. அரசியல் எவ்வளவு கடினமான, போராட்டம் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் விஜய் சந்திப்பார். அவர் அதில் தாக்கு பிடித்து இருக்க வேண்டும். அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துகள்.

மது வியாபாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் மதுவிலக்கு பிரிவு பயன்படுத்தப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் வெற்றிகரமாக அமையட்டும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது. இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீது ஜிஎஸ்டிரி விதிக்கக்கூடாது என மனிதநேயத்தோடு நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஒன்றிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.