“ஆதவ் அர்ஜுனா கருத்து தொடர்பாக கலந்துபேசி முடிவெடுப்போம்” - திருமாவளவன்

 
திருமாவளவன்

கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு பேசி ஆதவ் அர்ஜுனா விவகாரகத்தில் முடிவு எடுப்போம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தை தொடும் முடிவு: பிரதமரின்  விமர்சனத்துக்கு திருமாவளவன் பதில் | Thirumavalavan response to Prime  Minister ...

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல்.திருமாவளவன், “திமுக - விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.  என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. அதனால் திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலும் எழாது” என்றார்.

திமுக குறித்த விமர்சனம்; ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா? - மௌனம்  கலைத்த திருமாவளவன் | Thirumavalavan spoke about Aadhav Arjuna controversy -  Vikatan

விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு, உட் கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும் எனவும், கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள் , பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் இது குறித்து தொலைபேசி மூலமாக பேசியிருக்கிறேன் எனவும்,மீண்டும் அவர்களுடன கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.