தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை விசிக வரவேற்கிறது - திருமாவளவன்

 
thiruma thiruma

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில்,  தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது  அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும் என கூறினார்.