மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்- திருமாவளவன்

 
அதிமுக பக்கம் நெருங்குகிறேனா? அதெல்லாம் இல்ல: ஜெயக்குமாருக்கு திருமாவளவன் பதிலடி

உயிர் காக்கும் உன்னத பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட  மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

thirumavalavan

இதுதொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய்த் துறையின் தலைவரும் பேராசிரியருமான மருத்துவர் திரு. பாலாஜி அவர்களைக் கொலை வெறியோடு அவரது கழுத்தின் வலதுப் பகுதியில் கத்தியால் குத்தியிருக்கும் கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுகிறோம்.  100 விழுக்காடு நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதிலும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணப்படுத்துவது  அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்நிலையில், தன்னுடைய தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதற்கு மருத்துவரைக் கொலை செய்ய முயற்சிப்பது எவ்வளவு குரூரமானது? 


இந்தக் கொடிய தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டுகிறோம். உயிர் காக்கும் உன்னத பணியில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட  மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டுகிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள மருத்துவர் பாலாஜி அவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுமென விழைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.