பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து - தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!!

 
thiruma

பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் உரிய நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என தொடர்ச்சியாக அரசு கண்காணிக்க வேண்டும் என்று திருமாவளவன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அத்திப்பள்ளி அருகே பட்டாசுக் கடையில்  நடந்த வெடி விபத்தில் தமிழகத்தைச் சார்ந்த 14பேர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தா.அம்மாபேட்டை கிராமத்தைச்  சார்ந்த 8 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தைச் சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

tn

கடந்த 4ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் இத்தகைய வெடி விபத்துகள் நிகழாமல் இருக்கும் வகையில் அரசு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும், வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் உரிய நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என தொடர்ச்சியாக அரசு கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

thiruma
 
வெடிவிபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எமது அஞ்சலியை செலுத்துகிறோம். அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.